google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: டெல்லி சென்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சோனியா-ராகுல் காந்தியை சந்திக்கிறார்

சனி, 22 ஆகஸ்ட், 2015

டெல்லி சென்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சோனியா-ராகுல் காந்தியை சந்திக்கிறார்

T
புதுடெல்லி,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பிரச்சினையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பிரதமர் மோடி - முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பிரச்சினையில் சிக்கிக்கொண்டார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட காமராஜர் அரங்கத்தில் வேலை பார்த்த வளர்மதி என்ற பெண், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கைது செய்யப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

இதனால், மீண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை ஈரோட்டில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் நேராக சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

கைது நடவடிக்கைக்கு பயந்துதான் அவர், திடீரென டெல்லிக்கு சென்றுவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது, கட்சி சார்பில் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவே அவர் அங்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தனர்.

தமிழ்நாட் டில் இளங்கோவனுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் பற்றி மேலிடத் தலைவர்களிடம் இங்குள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இளங்கோவனை டெல்லி வந்து விளக்கம் அளிக்கும்படி சோனியா உத்தரவிட்டதின் பேரில் அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்பட்டது.

டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் கள் கூட்டம் சோனியா தலைமையில் நடந்தது. இன்று பிற்பகல் காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள இளங்கோவன் சென்றுள்ளதாக தெரிவித் தனர்.

என்றாலும் இன்று சோனியா மற்றும் ராகுலை இளங்கோவன் சந்தித்து பேசு வார் என்று தெரிகிறது. இன்று சந்திக்க இயலாவிட்டால் நாளை (ஞாயிறு) சோனியாவை அவர் சந்திப் பார் என்று கூறப்படுகிறது.இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிராக தற்போது  அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் போராட்டம் பற்றி இளங் கோவன் விளக்கி கூறுவார் என்று தெரிகிறது. மற்றும் காமராஜர் அரங்க பெண் ஊழியர் புகார் குறித்தும் இளங்கோவன் விளக்கம் அளிப்பார் என்று தெரிய வந்துள்ளது.இளங்கோவன் விளக்கம் அளித்த பிறகு இந்த இரு விவகாரங்களிலும் சோனியா முடிவு செய்து நடவடிக்கை எடுப்பார் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக