google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரிவினைவாத தலைவர் ஷாபிர் அகமது டெல்லி புறப்பட்டார்

சனி, 22 ஆகஸ்ட், 2015

பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரிவினைவாத தலைவர் ஷாபிர் அகமது டெல்லி புறப்பட்டார்


ஸ்ரீநகர்,

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஸிசுடன் பேச்சு வார்த்தை நடத்த, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஷாபிர் அகமது டெல்லி புறப்பட்டுச்சென்றார். 

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தேசிய பாதுகாப்பு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.இதற்காக இந்தியா வருகை தரவுள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஸிஸ், காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, தீவிரவாதம் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்று இந்த பேச்சுவார்த்தையில் மூன்றாவது பங்குதாரர்களுக்கு இடம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சர்தஜ் ஆஸிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று ஸ்ரீநகரில் இருந்து விமானம் மூலம் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான  ஷபிர் அகமது ஷா டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றார்.  முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரிவினைவாத தலைவர் ஷா, பேச்சு வார்த்தை நடைபெறுமா என்பது குறித்து பல குழப்பங்கள் நிலவுகிறது. எதுவாக இருந்தாலும் நான் டெல்லிக்கு செல்கிறேன். முன்னாள் பிரதமர்களான வாஜ்பாய், மன்மோகன் சிங் , மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர், இந்தியாவுக்கு வரும்   பாகிஸ்தான் அதிகாரிகளை  நாங்கள் சந்திக்க செல்லும் போது தடுத்ததில்லை. எனவே அவர்களின் செயல் தவறானதா என்று நாங்கள் இந்திய மக்களிடம் கேட்க சென்றுகொண்டிருக்கிறோம்.

காஷ்மீர் பிரச்சினை மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாகிஸ்தான் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பேச்சுவார்த்தைக்கு வந்து எங்கள் கருத்தை தெரிவிப்போம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்தியாவும் தனது  வாதத்தில் இருந்து முன்னோக்கி வர வேண்டும். ஆனால்,காஷ்மீர் பிரச்சினை கண்டிப்பாக விவாதிக்கப்படவேண்டும்” என்றார்.

ஆனால், டெல்லி வரும் பிரிவினைவாத தலைவர் ஷபிர் ஷாவும் அவரது ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
த்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக