புதுடில்லி: ''கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள சொத்து பற்றிய விவரங்களை, 30ம் தேதிக்குள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால், அக்டோபர் முதல், வரித்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுப்பர்,'' என, சி.பி.டி.டி., எனப்படும், நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் எச்சரித்துள்ளார். வெளிநாடுகளில் பதுக்கிய பணத்தை மீட்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கறுப்புப்பண தடுப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.வெளிநாடுகளில், அரசுக்கு தெரியாமல் பணம் அல்லது சொத்து வைத்திருந்தால், 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 120 சதவீத அபராதமும் விதிக்க, இச்சட்டம் வகை செய்கிறது. கறுப்புப்பணம் வைத்திருப்போர், தம் சொத்துகளை முறையாக அரசுக்கு தெரிவிக்க, 90 நாள் சிறப்பு கால அவகாசத்தை மத்திய அரசு அளித்துள்ளது.
வரும், 30ம் தேதிக்குள், வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் பற்றிய தகவல்களை அளித்து, அவற்றின் மீது, 60 சதவீத அபராதம் மற்றும் வரி செலுத்தி, தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.
அரசு அளித்த கால அவகாசம் முடிய, இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், டில்லியில் நிருபர்களை நேற்று சந்தித்த, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் கூறியதாவது:வெளிநாடுகளில் உள்ள சொத்து பற்றிய தகவல்களை தெரிவிக்க, 30ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த தவறுவோர், வேண்டுமென்றே தகவலை மறைத்ததாக கருதப்பட்டு, அவருக்கு எதிராக, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்; வரித்துறை அதிகாரிகள், கறுப்புப்பணம் பதுக்குவோரை தேடிப் பிடித்து நடவடிக்கை எடுப்பர்.வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் பற்றிய தகவல்களை மறைப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், தகவல் சேகரிப்பு முறைகளை, சி.பி.டி.டி., செம்மைப்படுத்தி உள்ளது.
கறுப்புப்பண சட்டத்தின் கீழ், சிலர் துன்புறுத்தப்படுவதாக கூறப்படும் புகாரில் உண்மை இல்லை. வெளிநாட்டு சொத்து பற்றி தகவல் அளிப்போருக்கு எதிராக, மீண்டும் விசாரணை நடத்த மாட்டோம். இதுதொடர்பான விதிமுறைகள், மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதற்கும், ஒற்றைச் சாளர முறையில், கறுப்புப்பணம் தொடர்பான தகவல்களை பெற, ஒரு அதிகாரி மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். கறுப்புப்பணம் பற்றிய தகவலை தெரிவிக்க விரும்பும் நபர், இந்த அதிகாரியை நேரில் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இணையவழியில், சம்பந்தப்பட்ட நபர், தகவல்களை, அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். வெளிநாட்டில் தனக்குள்ள சொத்து பற்றி தகவல் தெரிவிப்பவர் குறித்த ரகசியம், முழுமையாக காக்கப்படும்.
கறுப்புப்பணம் பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கா விட்டால், நேர்மையாக வரி செலுத்துவோர் மத்தியில் அதிருப்தி ஏற்படும். அதை போக்க, இவ்விஷயத்தில், கட்டாயம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அனிதா கபூர் கூறி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக