google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: விளையாட்டுத்துறை மீதான பிரதமரின் ஆர்வம்: மோடியை சந்தித்த சாய்னா ஆச்சரியம்

வியாழன், 17 செப்டம்பர், 2015

விளையாட்டுத்துறை மீதான பிரதமரின் ஆர்வம்: மோடியை சந்தித்த சாய்னா ஆச்சரியம்

புதன் கிழமையன்று பிரதமர் மோடியை சந்தித்த சாய்னா நெவால். | படம்: பிடிஐ.
புதன் கிழமையன்று பிரதமர் மோடியை சந்தித்த சாய்னா நெவால். | படம்: பிடிஐ.
விளையாட்டுகள் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் ஆர்வம் மற்றும் அறிவு குறித்து தான் ஆச்சரியமடைந்ததாக பேட்மிண்டன் நட்ச்த்திரம் சாய்னா நெவால் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் 65-வது பிறந்த தினத்தையொட்டி அவரைச் சந்தித்த சாய்னா நெவால், பிரதமரை குடும்ப உறுப்பினர் போலவே தான் உணர்ந்ததாக தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து அவர் கூறியதாவது, “இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. அவர் எனது ஆட்டம், எனது குடும்பம் பற்றி அதிகம் அறிந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவரது பேச்சு அவர் எனது குடும்ப உறுப்பினர் போலவே என்னை உணரச் செய்தது.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு வருகை தருமாறு நான் அழைப்பு விடுத்தேன். அவர் காமன்வெல்த், ஆசிய, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் குறித்து என்னிடம் உரையாடினார்.

அவர் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிறார். நம் நாட்டில் விளையாட்டுத் துறை திட்டங்கள் பற்றி அறிந்திருந்தார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் எனது ஆட்டம் பற்றி அவரிடம் விவரித்தேன். இந்தச் சந்திப்பு அவரது பிறந்தநாளையொட்டி ஏற்பட்டதால் முக்கியத்துவம் பெறுகிறது, நான் அவருக்கு உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நான் வெற்றி பெற்ற போது விளையாடிய ராக்கெட்டை வழங்கினேன், அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டதோடு, தனக்கு கிடைத்த பரிசுகளில் பொக்கிஷமாக இதனை பாதுகாப்பேன் என்று உறுதி அளித்தார்” இவ்வாறு கூறினார் சாய்னா நெவால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக