google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் பிறந்த நாள் வாழ்த்து

வியாழன், 17 செப்டம்பர், 2015

பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

அவர் தனது பிறந்த நாள் வாழ்த்து மடலில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் காலக்கட்டம் நாட்டின் பிரதமருக்காகவும் நாட்டுக்காகவும் குறிப்பிடத்தகுந்த சாதனைகளால் நிரம்பியுள்ளது.

நம் மிகப்பெரிய நாட்டின் பிரதமராக 15 மாதங்களுக்கு மேல் நீங்கள் பூர்த்தி செய்ததையடுத்து இந்த சிறப்பான தினம் வந்துள்ளது. உங்கள் கடின உழைப்பு, சுறுசுறுப்பு, உங்கள் சிந்தனை ஆகியவை பெரிய அளவுக்கு பாராட்டுகளை நாட்டிலும் உலக அரங்கிலும் ஈர்த்துள்ளது.

உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், நாட்டுக்காக மேலும் அர்ப்பணிப்புடன் நீண்ட நாட்கள் சேவை செய்ய உறுதியையும் கடவுள் உங்களுக்கு வழங்குவார்.

இவ்வாறு வாழ்த்தியுள்ளார் பிரணாப் முகர்ஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக