google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: சிலிகான் வேலி தொழில்நுட்ப நிறுவனங்களின் சி.இ,ஓ.,க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சிலிகான் வேலி தொழில்நுட்ப நிறுவனங்களின் சி.இ,ஓ.,க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

சான்ஜோஸ்: 5 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச்சபையில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் கலிபோர்னியாவின் சான்ஜோஸ் சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சான்ஜோஸ் நகரின் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் 18 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக இந்தியாவில் டிஜிட்டல் புரட்சிக்கான திட்டங்களை ஏற்படுத்திய மோடி, கலிபோர்னியாவில், கூகுள் நிறுவனத்தின் சுந்தர்பிச்சை , மைக்ரோ சாப்ட்டின் நாதல்லா, அடோப் நிறுவனத்தின் ஷாந்தானு நாராயண், மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை ள சந்தித்து பேசுகிறார்.



டெஸ்லா மோட்டார்சில் பிரதமர் மோடி: பேலோ ஆல்டோவிலுள்ள டெஸ்லா மோட்டார் தலைமையகதை பார்வையிட்ட பிரதமர் மோடி, டெஸ்லா மோ்டடார்சின் சி.இ.ஓ., எலான் மஸ்க்கை சந்தித்து, அவரிடம் உரையாடினார். மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த உதவும் பேட்டரியில் இயங்கும் புதிய கார்களை பார்வையிட்டார். அங்கு பணியாற்றும் இந்திய ஊழியர்கள், மோடி மற்றும் எலான் மஸக்குடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக