google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: எஸ்பிஐ, ஆந்திரா வங்கிகளில் வட்டி குறைப்பு

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

எஸ்பிஐ, ஆந்திரா வங்கிகளில் வட்டி குறைப்பு


கடன்கள் மீதான வட்டி விகிதத்தை ஸ்டேட் வங்கி 0.4% குறைக்க, ஆந்திர வங்கி 0.25% குறைத்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 7.25%-லிருந்து 6.75% ஆக குறைத்ததையடுத்து ஸ்டேட் வங்கி மற்றும் ஆந்திர வங்கி ஆகியவை வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதாவது தற்போது ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் 9.3% ஆக குறைந்துள்ளது. 

ஸ்டேட் வங்கியின் வட்டிவிகிதக் குறைப்பு அக்டோபர் 5-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.

ஆந்திர வங்கியின் வட்டி விகிதம் தற்போது 9.75%, இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

சந்தை எதிர்பார்த்ததைவிட ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அதிகமாக இருந்தது. பெரும்பாலான வல்லுநர்கள் எதிர்பார்த்தது 0.25 சதவீதம் மட்டுமே. ஆனால் 0.50 சதவீத அளவுக்கு வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே பொதுத்துறை வங்கிகள் வட்டி குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக