google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: கேரளா பவனில் மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி போலீஸ் பொறுமை காட்டவேண்டும், உம்மன் சாண்டி

செவ்வாய், 27 அக்டோபர், 2015

கேரளா பவனில் மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி போலீஸ் பொறுமை காட்டவேண்டும், உம்மன் சாண்டி


புதுடெல்லி, 

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள கேரளா பவனில் டெல்லி போலீஸ் சோதனையில் ஈடுபட்டதை விமர்சனம் செய்துஉள்ள கேரளா மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி, டெல்லி போலீஸ் பொறுமை காட்டவேண்டும் என்று கூறிஉள்ளார். 

டெல்லியில் உள்ள கேரளா பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லி போலீஸ் படை நேற்று மாலை அங்கு விரைந்தது. 

மாலை 4 மணியளவில் டெல்லி போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தொலைபேசியில் பேசிய நபர் கேரளா பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது என்று கூறிஉள்ளார்.

இதனை தொடர்ந்து எந்தஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் டெல்லி போலீஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து கேரளாபவன் சென்ற டெல்லி போலீஸ் அதிகநேரமாக அங்கு நின்று உள்ளது. கேரளா பவனில் உள்ள அதிகாரிகளிடம், பணியாளர்களிடம் பேசிஉள்ளனர். அவர்கள் எருமை இறைச்சிதான் வழங்கப்படுகிறது என்றும் இது சட்டவிரோதம் கிடையாதே என்ற் பதில் அளித்து உள்ளனர். 

மூத்த போலீஸ் அதிகாரி ஜாதின் நார்வால் பேசுகையில், இப்பிரச்சனையை தேவையான உஷார் நிலை மற்றும் எங்களது நிலைபாடு மூலம் உடனடியாக தீர்த்து வைத்தோம். சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்துவிடகூடாது என்பதே எங்களுடைய நோக்கமாகும் என்று தெரிவித்தார். இதுஒரு தடுப்பு நடவடிக்கை. போலீசார் கேரளா பவனில் உள்ள உணவகத்திற்கு சென்றனர். அவர்கள் புகாரை பணியாளர்களிடம் தெரிவித்தனர், ஆனால் உணவகத்தில் இருந்து எந்தஒரு மாதிரியும்  சேகரிக்கப்படவில்லை என்று கூறினார். 

இதற்கிடையே கேரளா பவன் தற்போது எருமை இறைச்சி வழங்குவதை தடைசெய்துவிட்டது என்று சிலதகவல்கள் கூறிஉள்ளன. 

ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ. ரஷித் மீது கருப்பு மை வீசிய, இந்து சேனா அமைப்பை சேர்ந்தவர்களே புகார் கொடுத்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

‘உள்துறையிடம் விவரங்களை கேட்போம்’

கேரளா பவனில் டெல்லி போலீஸ் சோதனையில் ஈடுபட்டதை விமர்சனம் செய்துஉள்ள கேரளா மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி, டெல்லி போலீஸ் பொறுமை காட்டவேண்டும் என்று கூறிஉள்ளார். 

கோழிக்கோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, இச்சம்பவம் தொடர்பாக முழு தகவல்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. 

“சோதனை நடத்தப்பட்ட தகவலை பத்திரிக்கையில் படித்தே தெரிந்துக் கொண்டேன். டெல்லி போலீசார் பொறுமை காட்டவேண்டும்,” என்று கூறிஉள்ளார்.

கேரளா  பவன் அரசு அதிகாரிகள், மந்திரிகள் தங்கும் இடம்,  அங்கு சோதனை செய்வதற்கு முன்னதாக முறையாக விசாரிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்றும் கூறிஉள்ளார். 

டெல்லியில் போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, எனவே மத்திய அரசிடம், கேரளா அரசு இதுதொடர்பாக விவரங்களை கேட்கும் என்று உம்மன் சாண்டி தெரிவித்தார். சிலர் மாட்டிறைச்சி தடை தொடர்பாக தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் உம்மன்  சாண்டி சாடிஉள்ளார். 
கருத்துகள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக