google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: தாவூத் இப்ராஹிமால் உயிருக்கு ஆபத்து என சோட்டாராஜன் இந்தோனேஷியா போலீசிடம் சரண்?

செவ்வாய், 27 அக்டோபர், 2015

தாவூத் இப்ராஹிமால் உயிருக்கு ஆபத்து என சோட்டாராஜன் இந்தோனேஷியா போலீசிடம் சரண்?


மும்பை, 

பிரபல கடத்தல் கும்பல் தலைவனும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியுமான சோட்டா ராஜன் இந்தோனேஷியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மராட்டிய மாநில உள்துறை மந்திரி ராம் ஷிண்டே கூறுகையில், ‘சோட்டா ராஜன் நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதும், அவரை விசாரணைக்காக மத்திய அரசு எங்களிடம் ஒப்படைக்கவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்தநிலையில் இது குறித்து மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தனது ஆட்களை ஏவி சோட்டாராஜனை தீர்த்து கட்ட முயன்றார். இதனால் சோட்டாராஜன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். வெளிநாட்டில் இருந்தால் தாவூத் இப்ராஹிமால் தனது உயிருக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட அவர், மும்பை தான் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுகிறார்.

இதனால் அவர் மும்பை போலீசில் சரணடைய விரும்புவதாக உயர் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் இதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே அவர் தனது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக இந்தோனேஷியா போலீசில் சரண் அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்தோனேஷியா போலீசார் கைது செய்துள்ளதாக அறிவித்து உள்ளனர்.

சோட்டாராஜன் மும்பைக்கு அழைத்து வரப்பட்டால் அவரிடம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் மட்டுமே விசாரணை நடத்துவார்கள்’’ என்று தெரிவித்தார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர், 1996–ல் தாவூத் இப்ராகிமிடம் இருந்து பிரிந்து மும்பையில் தனக்கென ஒரு கும்பலை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டார். இதனால் 2000–ம் ஆண்டில் தாவூத் இப்ராகிம் கும்பல் பாங்காக் நகரில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவரை சுட்டுக் கொல்ல முயற்சித்தது. எனினும் அதில் இருந்து அவர் தப்பிவிட்டார். வெளிநாடுகளில் இருந்தவாறே மும்பையில் தனது சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த அவரை எவ்வளவோ முயன்றும் மும்பை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. 

இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை கண்டுபிடிக்க சர்வதேச போலீசான இன்டர்போலின் உதவியை இந்தியா நாடியது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்டர்போல் போலீசாரால் சோட்டா ராஜன் தேடப்பட்டு வந்தார். அவரை கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க ‘ரெட் கார்னர்’ நோட்டீசும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் தாதா சோட்டாராஜன் இந்தோனேஷியாவின் பாலித்தீவில் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

சோட்டாராஜனின் குடும்பம் 

சோட்டாராஜனின் தாய் லட்சுமி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். சோட்டாராஜனுக்கு பிரகாஷ் மற்றும் தீபக் என்ற இரு தம்பிகள். இதில், பிரகாஷ் 2011–ம் ஆண்டு மாரப்படைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தீபக் இந்திய குடியரசு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். சோட்டாராஜனின் மனைவி பெயர் சுஜாதா. இவர் மீதும் மும்பையில் மிரட்டி பணம் பறித்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். சோட்டாராஜன்– சுஜாதா தம்பதிக்கு அனிதா, நிகிதா, கவுசி என்ற 3 மகள்கள் உள்ளனர். கவுசி வெளிநாட்டில் படித்து வருகிறார். மற்ற இருவரும் திருமணமாகி லண்டனில் வசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக