google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: 'நிலப்பரப்பு குறைகிறது; மக்கள்தொகை அதிகரிக்கிறது; உணவு, தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்'

செவ்வாய், 17 நவம்பர், 2015

'நிலப்பரப்பு குறைகிறது; மக்கள்தொகை அதிகரிக்கிறது; உணவு, தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்'



உத்தராகண்ட் ஆளுநர் கே.கே.பால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில். | படம்: பிடிஐ.
உத்தராகண்ட் ஆளுநர் கே.கே.பால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில். | படம்: பிடிஐ.
‘‘விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. மக்கள்தொகையோ அதிகரித்து வருகிறது. எனவே, உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவை தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்று குடியரசுத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் பந்த்நகரில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா செவ்வாயன்று நடந்தது. மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

விவசாயம்தான் நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக திகழ்கிறது. ஆனால், தற்போது விவசாயி நிலங்களின் பரப்பு குறைந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவை தொடர்ந்து மக்களுக்கு எப்படி கிடைக்கும். இயற்கை ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அப்போதுதான் உணவும், தண்ணீரும் தொடர்ந்து கிடைக்கும்.

120 மில்லியன் எக்டேர் நிலம் பல்வேறு கால கட்டங்களில் சீரழிந்துள்ளது. எனவே, தொடர்ந்து பலன் அளிக்க கூடிய நிலங்களை பயன்படுத்த வேண்டும். மண்வள தொழில்நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் உணவு பொருள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். ஆனால், இப்போது என்ன நடக்கிறது?

இருக்கிற விவசாய நிலங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம். மண் வளம் இழந்து, தரமில்லாத தண்ணீரால் உற்பத்தியை இழந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, மண்வளத்துக்கும் தரமான தண்ணீருக்கும் நாம் எடுக்கும் முயற்சிகள் என்ன?

உணவு பொருள் உற்பத்தியின் போது சத்துமிகுந்த பொருட்களை உற்பத்தி செய்வதும் அவசியம். அதேநேரத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப போதிய அளவுக்கு உணவு பொருள் உற்பத்தி இருக்க வேண்டும்.

உலக பட்டினி பட்டியல்-2015-ல் 3 முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைவு, எடை குறைந்த குழந்தைகள், குழந்தை இறப்பு சதவீதம் ஆகியவை பெரும் பிரச்சினையாக இருக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள 104 நாடுகளில் இந்தியா 80-வது இடத்தில் உள்ளது கவலை அளிக்கிறது. இதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களை நாம் மேம்படுத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் எல்லோருக்கும் ஊட்டச் சத்து பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கு இயற்கை ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும், பருவநிலை, உரங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாக்கள் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக