உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் முமு அமர்வு பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய சட்ட அமைச்சர் டி.வி.சதானந்த கௌட மக்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ்நாடு, குஜராத், சட்டீஸ்கர் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில், அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசு இப்பிரச்னையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனதுக்கு எடுத்து சென்றது.
கடந்த 2012 அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற முழு அமர்வு கூட்டத்தில், ஏற்கெனவே 1997 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளின் படி மாநில மொழிகளை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்குவது என்ற கோரிக்கையை நிராகரிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி, இதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இதேபோன்று கர்நாடக அரசும், கன்னட மொழியை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக பயன்படுத்த கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கைகள் அனைத்தும் மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்கு மத்திய அரசு எடுத்து சென்றது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர் நீதிமன்றத்தில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்குவது குறித்து மீண்டும் முழு அமர்வு ஆலோசித்து முடிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளது என்றார் அமைச்சர் கௌட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக