நிகழ் ஆண்டில் இதுவரை 69 ராணுவ வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய ராணுவ இணை அமைச்சர் இந்திரஜித் சிங் கூறினார்.
மக்களவையில் இன்று அவர் அளித்த எழுத்துபூர்வ பதிலில், 2015 ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள 69 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், சகவீரரை சுட்டுக் கொன்றதாக ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 334 ராணு வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர். மேலும், சக வீரரை சுட்டுக் கொன்ற 8 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கடற்படையில் 12 தற்கொலைகளும், விமானப் படையில் 67 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.
தொழில் ஆபத்துகள், குடும்ப விவகாரங்கள், வீட்டு பிரச்சினைகள், குறைகள் தீர்க்கப்படாமை, தனிப்பட்ட பிரச்னைகள், மன அழுத்தத்தை சந்திக்க இயலாமை, பணப்பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ராணுவ வீரர்களிடையே உளவில் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்காக பல அலுவலர்களுக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பிற மனநல மருத்துவர்களும் பணியில் அமர்த்தப்பட்டு, ராணுவ வீரர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஒவ்வொரு முகாமுக்கும் சென்று கூட்டாகவும், தனித்தனியாகவும் ஆலோசனை வழங்கி வருகின்றனர் என்றார் அமைச்சர் சிங்
ராணுவத்தை விட்டு வெளியேறவில்லை: இருபது ஆண்டுகள் பணி முடித்தவர்கள் ராணுவத்திலிருந்து வெளியேறுவது அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சிங், அப்படி யாரும் வெளியேறுவதில்லை என்றார். எனினும், கடற்படையில் மாலுமி நிலையில் உள்ள வீரர்கள் மட்டுமே 15 அல்லது 20 ஆண்டுகள் பணி முடித்த நிலையில் வெளியேறுகின்றனர். அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் அவர்கள் பணியை விட்டு செல்வதாக அமைச்சர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக