google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டத்திற்கு 81 சதவீதம் கடனுதவி வழங்குகிறது ஜப்பான்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டத்திற்கு 81 சதவீதம் கடனுதவி வழங்குகிறது ஜப்பான்


புதுடெல்லி, 

ஜப்பான் பிரதமர் சின்சியோ அபே இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், ரூ.98 ஆயிரம் கோடியில் இந்தியாவில் கொண்டு வரப்பட உள்ள முதல் புல்லெட் ரெயி்ல் திட்டத்திற்கு 81 சதவீதம் அளவுக்கு கடனுதவியை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. 

இதுகுறித்து, பாராளுமன்றத்தில் இன்று மத்திய ரெயில்வே இணை மந்திரி மனோஜ் சின்ஹா தெரிவிக்கையில், 
15 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாகவுள்ள மும்பை-அகமதாபாத் ஹை ஸ்பீடு புல்லெட் ரெயில் திட்டத்திற்கு ஜப்பான் அரசு 81 சதவீதம் நிதியை கடனாக அளிக்க முன்வந்துள்ளதாக கூறினார். 

தற்போது மும்பை-அகமதாபாத் இடையே ரெயிலில் சென்றடைய 8 மணிநேரம் ஆகும் நிலையில், இந்த புல்லட் ரெயில் வந்தால் 2 மணிநேரத்தில் சென்றுவிடலாம். மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரெயில் இந்த பாதையில் இயக்கப்படும். இதற்கான ஆய்வுகள் முடிவடைந்துள்ளதால் வரும் 2017-ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கி 2023-ம் ஆண்டு அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக