google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: திமுக, அதிமுக இரண்டுமே மதுவை ஒழிக்காது: வைகோ பேட்டி

வெள்ளி, 1 ஜனவரி, 2016

திமுக, அதிமுக இரண்டுமே மதுவை ஒழிக்காது: வைகோ பேட்டி

தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்யும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மதுவை ஒழிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அளித்த பேட்டி:
பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, அதிமுக கட்சிகள் இப்போது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளன.
தமிழக அரசியலில் மாறுதல் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
மதுவை இரண்டு கட்சிகளும் ஒழிக்காது. ஊழல், மது இரண்டையும் தமிழகத்தில் ஒழிக்க திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது.
எனவேதான், மக்கள் நலனைக் காக்க இந்த இரண்டு கட்சி ஆட்சி ஏற்படக்கூடாது என்ற எண்ணம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மக்களிடையேயும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு முந்தைய தேர்தல்களில் இப்படியொரு நிலைப்பாடு ஏற்படவில்லை. எனவே, இதுவரை இல்லாத ஒரு புதிய பரிமானம் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி மலர கூட்டணி அரசுதான் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்து, நான்கு கட்சிகளும் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக