நாகை மீனவர்கள் உள்பட இலங்கைச்
சிறைகளில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்
ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர் பிரச்னைக்கு, 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள்
தீர்வு கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை
(டிச.30) நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 29 மீனவர்களை இலங்கை
கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அதிர்ச்சியையும், கவலையையும்
ஏற்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த நிலை மாற வேண்டும்.
இப்போது தமிழகத்தில் பண்டிகைக் காலமாக இருப்பதால்
ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் உள்பட இப்போது கைது செய்யப்பட்ட
29 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இனி வரும் காலங்களில் மீனவர்கள் அச்சமின்றி
மீன்பிடிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரம் தடையின்றி தொடர்வதற்கும் மத்திய
அரசு இலங்கை அரசோடு உடனடி பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண
வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக