மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி, இட்ரிஸ் அலி. பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர்,
பிரதமருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அதனாலேயே அவர்கள் பாதுகாப்புப் படைக்கு சொந்தமான விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என தெரிவித்துள்ளார். இது சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி உள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், சாரதா நிதி நிறுவன ஊழலில் முதல்வர் மம்தா பானர்ஜியின் பெயரை குறிப்பிட்டால் அவர்கள் கையை வெட்டுவேன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி, கவுதம் டப்பிற்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இட்ரிஸ் அலியின் இந்த சர்ச்சை பேச்சை திரிணாமுல் காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது. இத்தகைய சர்ச்சை பேச்சுக்களை கட்சி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக