google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: டி.டி.சி.ஏ.,வில் முறைகேடு செய்யவில்லை'

புதன், 6 ஜனவரி, 2016

டி.டி.சி.ஏ.,வில் முறைகேடு செய்யவில்லை'

துடில்லி:''டில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கமான, டி.டி.சி.ஏ.,வின் தலைவராக இருந்த போது, ஒரு பைசா கூட முறைகேடு செய்யவில்லை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். 'மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டி.டி.சி.ஏ.,வின் தலைவராக இருந்த போது, முறைகேடுகள் நடந்தன. அதில், ஜெட்லிக்கும் பங்கு உள்ளது' என, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, கெஜ்ரிவால் உட்பட, ஆம் ஆத்மி தலைவர்கள் ஆறு பேர் மீது, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், அருண் ஜெட்லி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை, மாஜிஸ்திரேட் சஞ்சய் கனக்வால் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது, ஜெட்லி அளித்த வாக்கு மூலம்:
டி.டி.சி.ஏ., தலைவராக நான் இருந்த போது, யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கியதில்லை. டில்லி அரசின் ஒரு அதிகாரியிடம், சி.பி.ஐ., நடத்திய சோதனையை திசை திருப்பவே, என் மீது கெஜ்ரிவாலும், அவரது கட்சியினரும் சற்றும் ஆதாரமில்லாமல், அபாண்டமாக பழி சுமத்தி உள்ளனர்.
டி.டி.சி.ஏ., தலைவராக நான் இருந்த போதுதான், பெரோஸ் ஷா கோட்லா மைதானம் கட்டப்பட்டது. இதற்கான பணிகளை பார்வையிட, சங்கத்தின் இயக்குனர்கள் கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்தனர். அந்த குழுவில் நான் இடம் பெறவில்லை.
ஆனால், மைதானம் கட்டியதில், நான் முறைகேடு செய்துள்ளதாக, என் மீது கெஜ்ரிவாலும், அவரது கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். கோர்ட்டில் நான், மான நஷ்ட வழக்கு தொடர்ந்த பிறகும், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், எனக்கு எதிராகவும், என் குடும்பத்தினருக்கு எதிராகவும் தொடர்ந்து அவதுாறு பிரசாரம் செய்கின்றனர். பொது மக்கள் மத்தியில், என் கவுரவத்தை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.இதையடுத்து, விசாரணையை பிப்ரவரி, 3ம் தேதிக்கு, மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக