லண்டன்: பிரிட்டனில் கடந்த ஆண்டில் 100 குழந்தைகள் சிறையில் தங்கியதாகவும் , கருவுற்ற பெண் தாய்மார்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் இது போன்ற துயரங்கள் நிகழ்கிறது என அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கவலை தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் சிறை கொள்கை தொடர்பான கேமரூன் தனது ஒரு உரையில் மேலும் கூறியதாவது: சிறைகளுக்கு மாற்று வழிகள் குறித்து சிந்தித்து வருகிறோம் . கடந்த ஆண்டில் பெண்கள் சிறையில், பிறந்த சில மாதங்களே ஆன குழந்தைகள் சிறைவாசம் அனுபவித்துள்ளன.இந்த குழந்தைகளும் சிறையில் அடைக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது.
பிறக்கும் சில மாதங்கள் முன்னரும், பிறந்து சில மாதங்கள் வரையிலும், சில குழந்தைகள் ஒரு ஆண்டு வரையிலும் சிறைக்கூண்டுக்குள் இருக்க வேண்டியுள்ளது.இது மிக்க துயரமான செய்தி ஆகும் . இந்த தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலையை சிறை துறை உருவாக்கி கொடுத்துள்ளது.சில யூனிட்டுகள் இயற்கை சூழல் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. சிறையில் குழந்தைகள் பிறக்கும் நிலையில் உள்ள பெண் கைதிகள் உரிய யூனிட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். பிறந்த குழந்தைகள் 18 மாதங்கள் வரை சிறையில் இருக்க அனுமதிக்கப்படுகின்றன .
குழந்தைகளை பராமரிக்க ஸ்பெஷல் யூனிட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன . இதன் மூலம் இந்த குழந்தைகள் இயற்கை வண்ணங்களை காண முடியும் . இயற்கை ஒலிகளை கேட்க முடியும் . கடந்த ஆண்டில் மட்டும் 100 குழந்தைகள் இது போன்று சிறையில் இருந்தன .
இதனை விட வேதனையான விஷயம் என்னவெனில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே சிறையில் பிறந்து வெளியே வளர்ந்து மீண்டும் குற்றம் புரிந்து இந்த சிறைக்கு வந்துள்ளன. இது போன்ற குற்ற செயல்கள் அதிகரிக்க விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக