விசாகப்பட்டினம்: கடற்கொள்ளை மிகப்பெரிய சவாலாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய கடற்படை வீரர்கள் மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். உலகில் தலைசிறந்த கடற்படைகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்திய கடற்படைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடுகளுக்கிடையே, அமைதி, நட்பை வளர்க்க கடற்படையை பயன்படுத்துவோம். சர்வதேச கடற்படைகளின் ஒத்திகையை பார்க்கும்போது, சிறந்த அனுபவங்கள் கிடைக்கும். கடைசியாக கடந்த 2001ம் ஆண்டில் மும்பையில் சர்வதேச கடற்படை ஆய்வு நடந்தது. தற்போது உலகம் முற்றிலும் மாறியுள்ளது. அதேநேரத்தில், தற்போது, கடல் வளங்கள், சர்வதேச அளவில் உயிரினங்களின் வளமாக மாறியுள்ளது. அவை தற்போது, நமது நாட்டிற்கான பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்க உதவுகிறது.
சர்வதேச எரிசக்திக்கு கடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக அளவில் 60 சதவீத எண்ணெய் தயாரிப்புகள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கடற்படை பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு பதிலளிக்கும் முறையை பொறுத்து, கடல் வளத்திலிருந்து நமது பொருளாதார பலன்களை அறுவடை செய்ய முடியும். கடல் வழியிலான அச்சுறுத்தல்களால், இந்திய பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சர்வதேச அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளோம். இன்றைய நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட பலன்களை ஒன்று சேர்க்க, வரும் ஏப்ரல் மாதம், சர்வதேச அளவிலான கடற்படை தொடர்பான மாநாட்டை இந்தியா நடத்தும். <உலகில் உள்ள கடற்படைகளும், கடலோர பாதுகாப்பு நிறுவவனங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அமைதி, நட்புறவு மற்றும் நம்பிக்கையை வளர்த்து, பிரச்னைகளை குறைக்க வளர்க்க நாம் கடல் வளத்தை பயன்படுத்த வேண்டும்.கடற்படை தொடர்புகளை இந்தியா பல நூற்றாண்டுகளாக பராமரித்து வருகிறது.இந்திய பெருங்கடல் பகுதி, எனது கொள்கைகளில் முன்னிலையில் உள்ளது.நமது சர்வதேச வர்த்தகம் 90 சதவீதம் கடல் வழியாக நடக்கிறது. கடல் பாதுகாப்பு மற்றும் அனைத்து பிராந்திய வளர்ச்சி என்ற நிலையை நோக்கி நாம் பார்க்க வேண்டும். இந்த சர்வதேச கடற்படை ஆய்வில், கலந்து கொண்டுள்ள இந்திய கடற்படைகப்பல்கள், 37 மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவானவை. வரும் காலங்களில் இது அதிகரிக்கும். கடலோரத்தில் உள்ள இளைஞர்கள், இந்தியாவின் சொத்துக்கள். அவர்கள் கடல் தொடர்பான இயற்கையான மற்றும் ஆழ்ந்த அறிவை கொண்டுள்ளனர். கடற்கொள்கை மிகப்பெரிய சவாலாக உள்ளது. கடற்பயணத்தில் நாம் ஒத்துழைக்க வேண்டும். கடற்படை சுதந்திரத்தில் நாம் போட்டி போடக்கூடாது என கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக