google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: தாவூத்தை சந்தித்தாராம் மோடி: மீண்டும் சர்ச்சை கிளப்பிய அசம் கான்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தாவூத்தை சந்தித்தாராம் மோடி: மீண்டும் சர்ச்சை கிளப்பிய அசம் கான்

லக்னோ : பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை காண, பிரதமர் மோடி லாகூருக்கு சென்ற போது மும்பை தாக்குதல் குற்றவாளியும் நிழலுலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார் என சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் போன உத்திர பிரதேச அமைச்சர் அசம் கான் கூறி உள்ளார். ஆனால், இது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிவதற்காக பிரதமர் மோடி, திடீர் பயணமாக லாகூர் சென்றிருந்தார்.

மோடியின் இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உ.பி.,யின் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அசம் கான், பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றதன் மூலம் சர்வதேச சட்டங்களை தகர்த்துள்ளார். பிரதமர் மோடி லாகூர் சென்ற போது மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராஹிம்மை சந்தித்துள்ளார். மோடியும், நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசிய போது, ஷெரீப்பின் தாய், மனைவி மற்றும் மகள்களுடன் தாவூத்தும் உடன் இருந்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. வேறு யாரையெல்லாம் பிரதமர் மோடி சந்தித்தார் என்பது மூடி மறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அசம் கானின் இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள அரசு செய்தி தொடர்பாளர், இது முற்றிலும் ஆதாரமற்ற பொய்யான கருத்து என தெரிவித்துள்ளார். அசம் கானின் இந்த கருத்திற்கு பா.ஜ., மட்டுமின்றி காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அசம் கானின் இந்த கருத்து நம்பக் கூடியதாக இல்லை என தெரிவித்துள்ளன.

பா.ஜ.,வின் சுதன்சு மிட்டல் கூறுகையில், உ.பி., முதல்வர் அகிலேஷ் இத்தகைய அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவரை அகிலேஷ் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அது தான் நாட்டிற்கும் நல்லது. ஆசாம் கானின் இந்த வார்த்தைகள் அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

காங்., செய்திதொடர்பாளர் தாம் வடக்கன் கூறுகையில், அசம் கான் நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் இருப்பவர். அவர் இத்தகைய ஆதாரமற்ற கருத்துக்களை கூற கூடாது. பா.ஜ.,வுக்கும் எங்களுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதற்காக யார் என்ன கூறினாலும் அதை எங்களால் நம்பி விட முடியாது. தனது எருமை மாட்டை கண்டுபிடித்து தர உ.பி., போலீசுக்கு உத்தரவிட்டவர் தானே இந்த அசம் கான் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக