google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: பாக்., உளவுத்துறையின் உதவியுடன் மும்பை தாக்குதல் : ஹெட்லி ஒப்புதல்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

பாக்., உளவுத்துறையின் உதவியுடன் மும்பை தாக்குதல் : ஹெட்லி ஒப்புதல்

புதுடில்லி: பாக்., உளவுத்துறையின் (ஐ.எஸ். .ஐ., ) உதவியுடன் தான் மும்பை தாக்குதல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என பாகிஸ்தானை சேர்ந்த ஹெட்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் .
கடந்த 2008 நவ 26 ம் தேதி மும்பையில் பாக்., பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர் . இதில் 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் . இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான் . 

மேலும் இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதை இந்தியா பல முறை தெரிவித்து வந்தது . இதற்கான ஆதாரங்களை கொடுத்த இந்தியா, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது . இருப்பினும் பாக்.,தொடர்ந்து மறுத்து வந்தது. மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறான் . இவனிடம் விசாரிக்க இந்திய தேசிய புலனாய்வு படையினர் அமெரிக்கா சென்றனர். இந்த விசாரணையில் ஹெட்லி பாகிஸ்தான் தொடர்பு குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். இதில் , 26 / 11 மும்பை தாக்குதல் லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சையீது ஒப்புதலுடன் நடத்தப்பட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவு படை பிரிவினர் பெரிதும் உதவி செய்தனர். உளவு துறை அதிகாரிகளுக்கு பணமும் வழங்கப்பட்டது. மேலும் உளவு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மேஜர் இக்பால் , சமீர் அலி எங்களின் நோக்கத்திற்காக செயல்பட்டனர் .

மும்பை தாக்குதல் நடந்த பின்னர் லஷ்கர் அமைப்பின் லக்வியை ஐஎஸ்ஐ பிரிவு அதிகாரி சுஜா பாஷா சந்தித்தார் . இவ்வாறு சில முக்கிய தகவல்களை ஹெட்லி கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இந்த விஷயத்தை கையில் எடுத்து, உலக நாடுகளுக்கு தெரிவித்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா திட்டம் தீட்டியுள்ளது . இதனால் இந்தியா - பாக்., உறவு மற்றும் பேச்சு வார்த்தையில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக