google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: சிரிய அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

திங்கள், 8 பிப்ரவரி, 2016

சிரிய அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு


சிரிய அரசாங்கம் பாரியளவில் மனித உரமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.கைதிகளை மிகவும் மோசமான வகையில் சிரிய அரசாங்கம் சித்திரவதை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சிரிய ஜனாதிபதி பஸர் அல் அசாட் தலைமயிலான அரசாங்கம் இவ்வாறு உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிலர் தடுப்புக்காவலில் வைத்தே கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.சில கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிலர் தடுப்புக்காவலில் வைத்தே கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிரிய அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான நபர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.சிரியாவில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தம் காரணமாக இதுவரையில் 250,000 கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

4.6 மில்லியன் மக்கள் சிரியாவை விட்டு வெளியேறியுள்ளதுடன் இன்னும் 13.5 மில்லியன் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக