புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட உள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பிலான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்றைய தினம் இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றுள்ளது.
மிரிஹானவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
புதிய கட்சியின் சின்னம், கட்சியின் காரியாலயம், புதிய கட்சியின் அதிகாரிகள் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமப் பொறுப்பினை மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொள்ள வேண்டுமென கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய அரசியல் கட்சி இன்னும் இரண்டு வாரங்களில் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக