சென்னை,
பெருநகர சென்னைமாநகராட்சி கூட்டத்தில், பட்ஜெட் உரை புத்தகத்தை கிழித்த தி.மு.க. வினர் வெளியேற்றப்பட்டனர். கூச்சல்-குழப்பம், தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்வி பிரச்சினை
பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி, கல்வித்துறையில் வழங்கப்படும் 48 சலுகைகளை பட்டியலிட்டு பேசினார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன், ‘விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றார்.
இதே கோரிக்கையை தி.மு.க.வினரும் வலியுறுத்தினர். இதற்கு மேயர் சைதை துரைசாமி பதிலளித்து பேசும்போது, ‘தி.மு.க. ஆட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கல்வித்துறையை மாநகராட்சியுடன் இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா குழு ஒன்றை அமைந்துள்ளார். அந்த குழு தரும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார்.
மேயர் சைதை துரைசாமியின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்கட்சி தலைவர் போஸ் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வனும் வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க., காங்கிரசுக்கு ஆதரவாக தே.மு.தி.க.
தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தே.மு.தி.க. உறுப்பினர் ஆறுமுகமும் வெளிநடப்பு செய்தார். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து அனைவரும் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
11 மணியளவில் பட்ஜெட் உரை புத்தகம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அப்போது பட்ஜெட் உரையில் ஒன்றுமில்லை என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் பட்ஜெட் புத்தகத்தை கூட்டத்தில் கிழித்து எறிந்தனர்.
இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க. வினரை கண்டித்தனர். அப்போது தி.மு.க-அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்களை மேயர் சைதை துரைசாமி வெளியேற்றினார்.
தி.மு.க.வை தொடர்ந்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று கூறி காங்கிரஸ், தே.மு.தி.க. உறுப்பினர்கள் 2-வது முறையாக வெளிநடப்பு செய்தனர்.
மேயருக்கு எதிராக கோஷம்
வெளியேற்றம் செய்யப்பட்ட தி.மு.க. உறுப்பினர்கள் மன்றக்கூட்டத்துக்கு வெளியே மேயர் சைதை துரைசாமிக்கு எதிராக கண்டன கோஷங் களை எழுப்பினர். அப்போது எதிர்கட்சி தலைவர் போஸ்(தி.மு.க.) நிருபர்களிடம் கூறும்போது, ‘கடந்த 4 ஆண்டுகளில் 400 அறிவிப்புகளை மேயர் சைதை அறிவித்துள்ளார். ஆனால் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக