google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: ஜப்பானில் குறைந்துவரும் மக்கள் தொகை

சனி, 27 பிப்ரவரி, 2016

ஜப்பானில் குறைந்துவரும் மக்கள் தொகை

டோக்கியோ,

ஆசியா கண்டத்தில் உள்ள தீவுகள் அடங்கிய நாடு ஜப்பான் இரண்டாம் உலகப்போரின் போது இங்குள்ள ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

அதில் இருந்து மீண்டு மக்களின் அயராத கடும் உழைப்பால் வளர்ச்சி அடைந் துள்ளது. அங்கு 5 ஆண்டு களுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

சமீபத்தில் 2010- 2015ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில் முன்பை இருந்ததை விட 10 லட்சம் மக்கள் தொகை குறைந்து இருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த 2010-ம் ஆண்டில் ஜப்பானின் மக்கள் தொகை 12 கோடியே 81 லட்சமாக இருந்தது.

தற்போதைய கணக்கெடுப் பின்படி மக்கள் தொகை 12 கோடியே 71 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது முந்தைய கணக்கெடுப்பை விட 9 லட்சத்து 47 ஆயிரம் பேர் குறைவாக உள்ளனர்.அதாவது 0.7 சதவீதம் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது ஜப்பானை அதிர்ச்சியும், கவலையும் அடைய செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக