google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: முதலீடுகளை ஈர்க்க புதிய திட்டம் இல்லை: ப.சிதம்பரம்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

முதலீடுகளை ஈர்க்க புதிய திட்டம் இல்லை: ப.சிதம்பரம்


மத்திய பட்ஜெட்டில் புதிய யோசனைகளை எதுவும் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டங்கள் பின்பற்றப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த பட்ஜெட்டில் புதிய யோசனைகளை எதுவும் இல்லாத பட்ஜெட் என்று குறிப்பிட்ட சிதம்பரம், அனைத்து துறைகளிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இது இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக