காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்
படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள்
சுட்டுக் கொல்லப்பட்டனர். படையினர் இருவர் வீர மரணமடைந்தனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "குப்வாரா
மாவட்டம் மர்சாரி கிராமத்தில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் சிலர்
பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து ராஷ்டிரிய ரைபில்ஸ் படைப் பிரிவினர், சிறப்பு அதிரடிப் படையினர், மத்திய ரிசர்வ் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது தீவிர்வாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக
துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு உயரதிகாரி உட்பட இரண்டு வீரர்கள்
மரணமடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக