google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: ஐ.எஸ்.ஐ. உத்தரவில் புணே ராணுவ தலைமையகத்தை வேவு பார்த்தேன்: ஹெட்லி வாக்குமூலம்

சனி, 13 பிப்ரவரி, 2016

ஐ.எஸ்.ஐ. உத்தரவில் புணே ராணுவ தலைமையகத்தை வேவு பார்த்தேன்: ஹெட்லி வாக்குமூலம்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உத்தரவின் பேரில் புணே ராணுவ தலைமையகத்தை வேவு பார்த்ததாக டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 10 தீவிரவாதிகள் மும்பையில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியாகினர். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி தற்போது அமெரிக்க சிறையில் இருக்கிறார்.
மும்பை தாக்குதல் வழக்கில் இவர் அப்ரூவராக மாறி சிறையில் இருந்தபடியே மும்பை நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார்.
அதன்படி இன்று சனிக்கிழமை (6-வது நாளாக) ஹெட்லி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
1. புணே ராணுவ தலைமையகத்தை வேவு பார்த்தேன். ஐ.எஸ்.ஐ. மேஜர் இக்பால் உத்தரவின் பேரிலேயே வேவு பார்த்தேன்.
2. ராணுவத்திலிருந்து சிலரை வசப்படுத்தி முக்கிய ரகசிய தகவல்களைப் பெறுமாறு இக்பால் கூறினார்.
3. மும்பை தாக்குதலுக்குப் பின்னரும் சாஜித் மிர்ருடன் தொடர்பில் இருந்தேன். ஹபீஸ் சயீது, ஜாகிர் உர் ரெஹ்மான் பாதுகாப்பு குறித்து விசாரித்து வந்தேன்.
4. 2009-ல் மீண்டும் இந்தியா வந்தேன். அப்போது கோவா சென்றேன்.
இந்தத் தகவல்களை ஹெட்லி அளித்தார்.
டேவிட் ஹெட்லி வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நிறைவடைந்தது. குறுக்கு விசாரணை மற்றுமொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக