போபால்,
மத்திய பிரதேசத்தில் அரசு பணியாளர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக திக்விஜய் சிங்கிற்கு போபால் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது
இந்நிலையில் இன்று காலை போபால் சிறப்பு நீதிமன்றத்தில் திக்விஜய் சிங் ஆஜர் ஆனார்.
1993
முதல் 2003-ஆம் ஆண்டு வரை திக்விஜய் சிங் மத்தியப் பிரதேச
முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது பேரவைச் செயலகத்தில் நடைபெற்ற பணி
நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்தாக குற்றச்சாட்டு உள்ளது. இதில்
திக்விஜய் சிங் உள்ளிட்ட 8 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும்,
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த திக்விஜய் சிங், இந்த நியமனங்கள் உரிய
விதிகளின் படியும் மாநில அமைச்சகத்தின் ஒப்புதலுடனும் நடைபெற்றது என்று
ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், இது
தொடர்பான வழக்கில் போபால் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை
துணை நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது திக்விஜய் சிங்
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து,
அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம்
பிறப்பித்தது. இந்நிலையில் போபால் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில்
திக்விஜய்சிங் நேரில் ஆஜர் ஆனார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக