google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: மோடி விழாவில் மாணவர் கோஷம்; போலீசார் லேசான தடியடி

திங்கள், 22 பிப்ரவரி, 2016

மோடி விழாவில் மாணவர் கோஷம்; போலீசார் லேசான தடியடி

வாரணாசி: பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் மாணவர் எதிர்ப்பு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது . கோஷம் போட்ட மாணவரை சிலர் தாக்க முயற்சித்ததால், மேலும் டென்ஷன் தொற்றியது. இந்நேரத்தில் போலீசார் அந்த மாணவரை பிடித்து இழுத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷம் எழுப்பினர். எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் . இந்த சம்பவத்தினால் மோடி பங்கேற்ற விழாவில் சில நிமிடங்கள் பரபரப்பு தொற்றி கொண்டது.
முன்னதாக, உ. பி., மாநிலம் வாரணாசி சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பனாரஸ் இந்து பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில் : இந்த பல்கலை விழாவில் பங்கேற்பது எனக்கு பெருமை அளிக்கிறது. இங்கு பயின்ற லட்சக்கணக்கானவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் .நாளந்தா பல்கலைக்கு இணையான புகழ் இந்த பல்கலைக்கு உண்டு . பனராஸ் பல்கலை நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணை புரிந்துள்ளது. இங்கிருந்து வெளியேறும் மாணவர்கள் பல்வேறு பெருமைகள் பெறுகின்றனர். இதற்கு பாடுபடும் அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக