துருக்கி தனது எல்லையில் அந்த மக்களை தடுத்து நிறுத்தியுள்ளது.-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவின் விமானதாக்குதல்களின்
உதவியுடன் சிரிய அரசபடையினர் அலெப்பே நகரத்தை கைப்பற்றுவதற்காக
நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதை தொடர்ந்து பெருமளவு மக்கள்
சிரியாவிலிருந்து அகதிகளாக வெளியேற தொடங்கியுள்ளனர்.
எனினும் துருக்கி தனது எல்லையில் அந்த மக்களை தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து துருக்கியுடனான சிரிய எல்லைக்குள் உள்ள சுமார்35,000 மக்களிற்கு அந்த பகுதியிலேயே முகாம்களை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. மேலும் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைளையும் துருக்கியின் மனிதாபிமான பணியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் மீண்டும் இராணுவநடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதை தொடர்ந்து 35,000 ற்கும் மேற்பட்ட மக்கள் அலெப்பே நகரிலிருந்து வெளியேறி துருக்கியின் கிலிஸ் எல்லை பிராந்தியத்திற்குள செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் ஏற்கனவே துருக்கியில் 2.5 மில்லியன் சிரிய அகதிகள் தங்கியுள்ளனர்.மேலும் பெருமளவில் ஐரோப்பிய நாடுகளிற்குள் சென்றுள்ள சிரிய அகதிகளும் துருக்கியின் கடற்பாதையையே பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் துருக்கி அகதிகளிற்கு
தஞ்சம் அளிப்பதற்கும் ஐரோப்பிய நாடுகளிற்கு செல்ல முயல்பவர்களிற்கும்
இடையில் சமநிலைகாணமுடிகின்றது.துருக்கி தன்னாள் உள்வாங்க கூடியளவிற்கு
அகதிகளை உள்வாங்கிவிட்டது, ஆனால் இன்னமும் அவர்களிற்கு அடைக்கலம்
அளிக்கின்றது என அந்த நாட்டின் பிரதிபிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்போது அதன் எல்லைப்பகுதியில் குழப்பகரமான நிலை காணப்படுகின்றது,துருக்கி எல்லையை கடக்கமுடியாமல் தடுக்கப்பட்ட 35,000 பேர் அதன் தாக்கத்தை உணரத்தொடங்கிவிட்டனர்,அவர்களில் கடும் காயமடைந்தவர்களும் காணப்படுகின்றனர்.
மனிதாபிமான அமைப்புகள் தற்போது சிரிய எல்லைக்குள் உள்ள முகாம்களிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இதேவேளை தங்களை துருக்கிக்குள் அனுமதிக்குமாறு சிரியா அகதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், நாங்கள் ஓரு மாத குழந்தைகளுடன் கூட வந்துள்ளோம் நாங்கள் குண்டுவீச்சு இல்லாத பாதுகாப்பான துருக்கிக்குள் நுழைய முயல்கின்றோம் என அகதிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக