மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக
ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இத்தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உறுதிபடுத்தியுள்ளார்.
தேசதுரோக வழக்கில் கைதான கண்ணய்யா குமார் அண்மையில் இடைக்கால நிபந்தனை
ஜாமீனில் வெளியானார். விடுதலைக்குப் பின்னார் அவர் ஆற்றிய உரை
சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவர் மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக தகவல்கள்
வெளியாகின.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி
கூறும்போது, "வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்ணய்யா குமார்
பிரச்சாரம் செய்கிறார். இடதுசாரிகளை ஆதரிக்கும் மாணவர்கள் அனைவரும்
கண்ணய்யாவின் பிரச்சாரத்தில் பங்கேற்பர். முதன்முறையாக இத்தேசம் இடதுசாரி
ஆதரவு இளைஞர்களின் பலத்தை காணவிருக்கிறது" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக