google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: சித்து வாய்க்கு பூட்டு

புதன், 27 ஜூன், 2018

சித்து வாய்க்கு பூட்டு

கர்நாடக கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சித்தராமையா அடிக்கடி பேசி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்சியை காப்பாற்ற சித்தகாமையா வாய்க்கு பூட்டு போட வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்தில் புகார் கூற கர்நாடக மாநில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்து இருப்பாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள சிக்கல்கள்-குழப்பங்கள் காரணமாக காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாக புதுடெல்லி காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக காங்கிரஸ் ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் அமைந்து இதைத் தொடர்ந்து துணை முதல்வராக டாக்டர் பரமேஸ்வர் நியமனம் செய்யப்பட்டு அவரும் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்க மேற்கொள்ளப்பட்டது வரை சுமூகமாக செயல்பட்ட கூட்டணி ஆட்சி குமாரசாமி தற்போதைய நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்த நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் தற்போதைய முதல்வர் குமாரசாமிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு புதிய பட்ஜெட் அவசியம் இல்லை என்பது சித்துவின் கோரிக்கை. ஆனால் இதனை ஏற்க மறுத்த குமாரசாமி வரும் 5ம்தேதி புதிய பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இதனையடுத்து விவசாயிகளின் கடன் ரத்து தொடர்பாக குமாரசாமி திட்டமிட்டு வரும் வேளையில் கடன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று சித்து கருத்து தெவித்துள்ளார். இது இருவரிடையே ஆன விரிசலை அதிகரிக்கச் செய்தது.
இந்த நிலையில் கர்நாடக மாநில ஜனதா தளம் கட்சித் தலைவர்கள குறிப்பாக தேவேகவுடா முதல்வர் குமாரசாமி உள்ளிட்டவர்கள் முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது கட்சித் தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இநத நிலையில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தியதுடன் உடனடியாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த கூறியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் கே.சி.வேணுகோபால் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் அவசர ஆலோசனையை விரைவில் மேற்கொள்வார் என்று நாளை சித்தராமையா அவரது சிகிச்சை முடித்து இரண்டொரு நாளில் அவசரக் கூட்டமே நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக