பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நாடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஐநாவில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளைச் சேர்ந்த 550 வல்லுநர்களிடம் ஆய்வு நடத்தி உள்ளது. இந்த ஆய்வில் இந்தியா முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகியவை 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. சவுதி அரேபியா 5 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 6 ஆவது இடத்திலும், அமெரிக்கா 10வது இடத்திலும் உள்ளன.
கடந்த 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நாடுகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது இந்த பட்டியலில் இருந்து இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
டெல்லியில் கடந்த 5 அண்டுகளுக்கு முன் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட பின்பும், போதிய விழிப்புணர்வோ, தடுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படாததே இந்தியா முதலிடத்திற்கு வந்ததற்கான காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில், 2007 முதல் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 83 % வரை அதிகரித்திருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதாவது இந்தியாவில், ஒரு மணி நேரத்திற்கு 4 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மீ டூ மற்றும் டைம்ஸ் அப் போன்ற இயக்கமே தொடங்கப்பட்டதையடுத்து அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் ஓரளவு குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக