google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: ரூ.45 லட்சத்துக்கு என்ன செலவு செய்தீர்கள்?- ஆளுநரிடம் விளக்கம் கேட்டு ஒடிசா அரசு நோட்டீஸ்

வெள்ளி, 6 ஜூலை, 2018

ரூ.45 லட்சத்துக்கு என்ன செலவு செய்தீர்கள்?- ஆளுநரிடம் விளக்கம் கேட்டு ஒடிசா அரசு நோட்டீஸ்

ஓடிசா மாநில ஆளுநர் கணேஷ் லால் கடந்த மாதம் விமானத்தில் பயணம் மேற்கொண்டதில் ரூ.45 லட்சம் செலவு செய்யப்பட்டு இருப்பதற்குக் காரணம் கேட்டு மாநில அரசின் பொதுநிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஓடிசா மாநில ஆளுநராகக் கடந்த மே மாதம் கணேஷ் லால் நியமிக்கப்பட்டார். ஆளுநர் கணேஷ் லால் கடந்த மாதம் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி டெல்லிக்குப் பயணித்தார், அங்கிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை எடுத்து, உபியில் உள்ள தனது சொந்த ஊரான சிர்ஸாவுக்குச் சென்றார். இதில் ஜெட்விமானத்தை பயன்படுத்திய வகையில், ரூ41.18 லட்சமும், ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்ததில் ரூ.5 லட்சமும் செலவாகியது.
 
இந்நிலையில், ஆளுநர் கணேஷ் லாலின் இந்தச் செலவுகளுக்கு விளக்கம் கேட்டு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் பொது நிர்வாகத்துறை இரு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் ஜெட்விமானத்தையும், ஹெலிகாப்டரையும் என்ன காரணங்களுக்காக பயன்படுத்தினீர்கள், செலவு செய்யப்பட்டது உண்மைதானா என்று கேட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக