google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: மனைவியுடன் ஸ்டைலாக லண்டனுக்குப் பறந்த ஸ்டாலின்!

செவ்வாய், 10 ஜூலை, 2018

மனைவியுடன் ஸ்டைலாக லண்டனுக்குப் பறந்த ஸ்டாலின்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் லண்டன் சென்றுள்ளார்.

திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து விமான மூலம் லண்டனுக்குப் பயணித்தார்.

அவர் துபாய் வழியாக லண்டனுக்குச் சென்றிருக்கிறார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், மனைவி துர்கா ஸ்டாலினுடன் அவர் இப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். லண்டனில் ஒரு வாரம் தங்கிவிட்டு சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்துக்கு வந்த அமித் ஷா பாஜக தமிழகத்துக்கு பல திட்டங்களைத் தந்துள்ளதாக பேசியது குறித்து விமான நிலையத்தில் வைத்து அவரிடம் கருத்து கேட்டபோது, ‘நான் அவர் பேசியதை பார்க்கவில்லை’ என்று பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக