google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: கோவையில் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் கைது!

செவ்வாய், 10 ஜூலை, 2018

கோவையில் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் கைது!

கோவை பீளமேடு பகுதியில், வீடு புகுந்து திருடிய வடமாநில கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் மாதவன்(வயது52). தனியார் நிறுவன மேலாளரான இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார்.

பின்னர் வீடு திரும்பிய இவர், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் திருடு போய் இருந்தததை பார்த்து. இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனையடுத்து திருட்டு கும்பலை பிடிக்க பீளமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்–இன்ஸ்பெக்டர் இப்ராகீம் பாதுஷா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக