google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: தகாத உறவு குற்றம் அல்ல - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வியாழன், 27 செப்டம்பர், 2018

தகாத உறவு குற்றம் அல்ல - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆண் பெண் இடையிலான தவறான உறவு குற்றம் அல்ல என்றும், இதில் தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. #Adultery #Section497 #SupremeCourt
சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய தண்டனை சட்டம் 597-வது பிரிவில் தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்கிறது. பெண்ணுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அப்போது ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் 597-வது பிரிவு ரத்து செய்யப் படுவதாகவும் தகாத உறவு குற்றம் இல்லை என்றும் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.
கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல. ஆணுக்கு பெண் சமம். இதில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம் ஆகும். ஆணுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது சட்ட விதிமீறல் ஆகும்.

கணவன்-மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவு காரண மாகிறது. தகாத உறவு வி‌ஷயத்தில் அதில் யாரும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் அது குற்றம் இல்லை. தகாத உறவில் விவாகரத்து நடக்கலாம். யாரும் தற்கொலைக்கு தூண்டப்படக்கூடாது.

திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது ரத்து செய்யப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக