புதுடில்லி : நாடு தற்போதுள்ள சூழ்நிலை, எல்லைப் பிரச்னைகள் மற்றும்
அயல்நாட்டு பிரச்னைகளை பார்க்கும் போது மோடிக்கு பதில் அத்வானி பிரதமராகி
இருக்கலாம் என தோன்றுகிறது. அத்வானி பிரதமராகி இருந்தால் அவரது அனுபவம்
மற்றும் அறிவாற்றலால் பிரச்னைகளை சரி செய்திருப்பார். அத்வானி இப்போதும்
பிரதமருக்கு தகுதியானவர் தான். பா.ஜ., அவரை சிறப்பாக பயன்படுத்தலாம்.
கீர்த்தி ஆசாத்தின் சஸ்பெண்ட் துரதிஷ்டவசமானது. அவர் ஊழலுக்கு எதிராக தான்
பேசினார். கட்சிக்கு எதிராக அல்ல. இவ்வாறு பேசுவதற்காக என்னை கட்சியில்
இருந்து நீக்கினாலும் அதனை பற்றி எனக்கு கவலையில்லை என பா.ஜ., தலைவர்களில்
ஒருவரான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக