google.com, pub-6424298476279500, DIRECT, f08c47fec0942fa0 5 A to Z world wide news TAMIL: ஏழை, விவசாயிகளுக்கான அரசு : பார்லி., யில் ஜனாதிபதி உரை

திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஏழை, விவசாயிகளுக்கான அரசு : பார்லி., யில் ஜனாதிபதி உரை

புதுடில்லி: எனது அரசு ஏழைகள், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றும், வளர்ச்சியை மையமாகக் கொண்டு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பெருக்கிட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொருளதார வளர்ச்சி ஏற்பட்டு வருவதாகவும், பணவீக்கம் சீராக இருப்பதாகவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை நிலையாக உள்ளது என்றும் பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் உரயைாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (23 ம் தேதி ) துவங்கியது . இந்த கூட்டத்தின் முதல்நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்லி., கூட்டு குழு கூட்டத்தில் உரையாற்றினார். முன்னதாக அவர் குதிரைகள் புடைசூழ வரவேற்று அழைத்து வரப்பட்டார். அவரை சபாநாயகர் சுமித்திரா மகாஜன், பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் இணைந்து வரவேற்றனர் .

அவர் பேசியதாவது: இந்த கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ள பணியை ஆற்றுவீர்கள் என நம்புகிறேன். எனது அரசு வளர்ச்சியை மையமாக வைத்து பல்வேறு திட்டங்களை தீட்டி முன்னேற்ற பாதையில் இந்தியா செல்கிறது . கடையருக்கும் கடைத்தேற்றம் என்ற கொள்கை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்பதில் எனது அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது . ஏழைகள்ல விவசாயிகள் நலம் பெறும் வகையில் அரசு செயலாற்றி வருகிறது என்று தெரிவித்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக