மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்படும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
மக்கள் நல கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி இரண்டாம் கட்ட பிரசார பயணம் கோவையில் இன்று தொடங்கியது.
இதில் கலந்து கொண்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
பெரியாரின் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்து கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வருபவர்கள், திராவிட இயக்கத்தின் முக்கிய கூறுகளை எப்போதோ கைவிட்டு விட்டனர்.
அத்துடன் அரசியல் கலாசாரத்தையும் சீரழித்துவிட்டனர். அவர்களுக்கு பெரியாரின் பெயரைச் சொல்லும் தகுதி இல்லை. ஆனால் திராவிட இயக்க கோட்பாடுகளை இன்றும் தூக்கிப்பிடிப்பவராக வைகோ உள்ளார்.
எங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்படும். இத்தனை ஆண்டுகளாக ஊழல் செய்தவர்களிடம் இருந்து சொத்துகளை பறிமுதல் செய்வோம்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 30 ஆயிரம் சிறு, குறு தொழில்கூடங்கள் மூடப்பட்டு, சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு தொழில்களுக்கு முன்னுரிமை அளிப்போம். விசைத்தறி பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக