வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என அறிவுரை
*
ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை அடைந்த 7 குற்றவாளிகள் விடுதலை
செய்யப்படும் விவகாரம், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சிக்க வாய்ப்புள்ளது.
இதன் மீது மத்திய தேர்தல் ஆணையம், அது வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை
ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனைபெற்ற பேரறிவாளன், நளினி,
ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேர்
கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசிடம் கருத்து கேட்டு தமிழக
அரசு கடந்த புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசிடம் மூன்று
நாட்களில் பதில் கேட்கப்பட்டுள்ள கடிதம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில்
ஆதாயம் பெரும் பொருட்டு எழுதப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தமிழகத்தில்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் மத்திய அரசிற்கும் பொருந்தும் என தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. எனவே, 7 குற்றவாளிகளின் விடுதலை தமிழகத்தின்
வாக்காளர்கள் இடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது என மத்திய
தேர்தல் ஆணையம் கருத்துகிறது.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தலைமை ஆணையர் நசீம் ஜைதி கூறுகையில்,
'இந்த வழக்கில் என்ன நடக்கும் என தேர்தல் ஆணையத்தால் யூகித்து உத்தரவிட
முடியாது. இதுபோல் ஒரு சூழல் ஏற்படும் போது அதன் மீது எங்கள் பார்வையை
கண்டிப்பாக செலுத்துவோம். இது வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல்
இருக்கும் வகையில் உறுதிப்படுத்துவோம்' எனத் தெரிவித்தார்.
தமிழக அரசின் கடிதத்தை ஆராய்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர்
ராஜ்நாத்சிங் மக்களவையில் கூறி இருந்தார். இதை தொடர்ந்து தமிழக அரசின்
கடிதம் மீது கருத்து கேட்டு சட்டத்துறை அமைச்சகம் மற்றும் அட்டார்னி
ஜெனரலிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் பிறகு மத்திய அரசு முடிவு எடுத்து அனுப்பும் பதில், தமிழக தேர்தல்
வாக்காளர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு நிலவுகிறது.
எனவே, மத்திய அரசு எடுக்க இருக்கும் முடிவில் தமிழகத்தின் தேர்தல் அறிவிப்பு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடையவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக