"2014 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு உத்தரப்பிரதேச மாநில தலித்துகள்
வாக்குகளை வாரி வழங்கியதுபோல் 2017-ல் அம்மாநிலத்தில் நடைபெறவிருக்கும்
சட்டப்பேரவை தேர்தலில் நடைபெறாது"
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை
விவகாரத்துக்குப் பின்னர் பாஜக கடுமையான பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
குறிப்பாக பாஜக தலித் விரோத போக்கை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி ஏப்ரல் 14-ம் தேதி முதல் நாடு
முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக மேலிட
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பாஜக தலைவர்கள் சிலர்
கூறும்போது, "கடந்த வாரம் டெல்லியில் அமித்ஷா தலைமையில், பாஜக தேசிய
செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்
விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பொதுச்செயலாளர்களுள் ஒருவர்
கூறும்போது, "2014 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு உத்தரப்பிரதேச மாநில
தலித்துகள் வாக்குகளை வாரி வழங்கியதுபோல் அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில்
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நடக்காது என்ற அச்சவுணர்வு
ஏற்பட்டுள்ளது. அங்கு மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதிக்கம் ஏற்படும்
சூழல் இருப்பதுபோல் தெரிகிறது" என்றார்.
சமூக நல்லிணக்கம்:
பாஜக ஏற்பாடு செய்துள்ள ஒரு வார கால கொண்டாடத்திலும் சமூக நல்லிணக்கம்
தொடர்பான கருத்துகள் முன்னிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆர்எஸ்எஸ் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள 'இந்துக்கள் அனைவரும்
சகோதர, சகோதரிகளே' என்ற தலைப்பிலான சிறுபுத்தகத்தை விநியோகிக்க
திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக